தமிழ்ச் சங்கம்

மூவொரு இறையின் பேரருளாலும் நமது பேராயத்தந்தை பேரருள்திரு வே. தேவசகாயம் அவர்களின் எண்ணத்தில் எழுந்த எழில்மிகு சிந்தையாலும் 29-1-2000 அன்று நம் பேராயத்தில் கிறித்தவ இலக்கியத் தமிழ்ப் பேரவை என்னும் அமைப்பு உருவாக்கப்பட்ட்து.
பேராயத்தின் செயலர் அருள்திரு த. தேவபுத்திரன் அவர்களின் அறிவுரையின்படி [ஒவ்வொரு திருச்சபையிலும் தமிழ்ச் சங்கம் அமைக்கவேண்டும்] நம் ஆயர் அருள்திரு. சார்லஸ் பிரபாகரன் அவர்களின் தலைமையில் நம் திருச்சபையில் தமிழ் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்ச் சங்கத்தின் நோக்கம்:-

1. கிறித்தவத் தமிழ் இலக்கியங்களின் வழியாக்க் கிறித்துவின் நற்செய்தியினை அறிவித்தல்.
2. கிறித்தவத் தமிழ் இலக்கியங்களைக் கிறித்தவர்கள் மத்தியிலும், கிறித்தவர் அல்லாதவர்களிடையேயும் அறிமுகம் செய்து அதன் வாழியாக்க் கிறித்தவத் தமிழ் இலக்கிய ஈடுபாட்டை உருவாக்குதல், வளர்த்தல்.
3. கவிதை, கட்டுரை, சிறு கதை, நாடகம் ஆகிய வற்றை எழுதும் திறனையும், பேச்சாற்றலையும் திருச்சபை மக்களிடையே வளர்க்க போட்டிகள் நட்த்துதல்.
4. திருச்சபை சார்பில் நூல் வெளியிடுதல்
தமிழ்ச் சங்க உறுப்பினர்கள்

1. அருள்திரு சார்லஸ் பிரபாகரன்  –  தலைவர்
2. அருள்திரு து. இன்பராஜ்  –  துணைத் தலைவர்
3. திரு. இரா. நெகேமியா  –  இயக்குநர்
4. திருமதி ஹெ. ஜூலியா ராணி  –  துணை இயக்குநர்
5. திருமதி ப. த. இராணி பிரகாஷ்  –  ஒருங்கிணைப்பாளர்
6. திரு கி. எபோட் ஜாக்ஸன்  –  உறுப்பினர்
7. திருமதி பா. புஷ்பராணி  –  உறுப்பினர்
8. திரு தேவ தன அகஸ்டின்  –  உறுப்பினர்
9. திருமதி தா. எஸ்தர் சந்திரா  –  உறுப்பினர்
10. திருமதி வே. உஷா வேதராஜ்  –  உறுப்பினர்
11. திருமதி இரா. ஜெய்சி ஜாஸ்மின்  –  உறுப்பினர்
12. திருமதி தா. கிறிஸ்டல் ரூபி  –  உறுப்பினர்
13. திருமதி ஜெபசீலி  –  உறுப்பினர்
14. திருமதி தா. கிறிஸ்டல் பிறிடா  –  உறுப்பினர்
15. திரு தே. வசந்த ராஜ்  –  உறுப்பினர்

”தமிழ்நாடு உன் தாய் நாடு
தமிழ் மொழி உன் தாய் மொழி
தமிழில் இறைவனை வழிபடு
தமிழில் திருவிவிலியம் படித்திடு”